ரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது. நீலாம்பரி கதாபாத்திரத்தில் தனது அற்புதமான வில்லி நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.

அந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு நற் பெயரை வங்கி கொடுத்தது. இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் தா க்கத்தை ஏற்படுதியுள்ளது. இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா, அதன் பிறகு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். நடிப்பது மட்டுமின்றி தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

By marvel

You missed