பிரபல இயக்குனரை ரகசிய திருமணம் செய்த இளம் நடிகை !! அதிர்ச்சியில் திரையுலகம் !!

பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து முடித்துள்ளார்.கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை விஜயலட்சுமி.

1997ம் ஆண்டு சிறந்த கன்னட நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றுள்ளார். தற்போதும் சினிமாவில் பிஸியிக நடித்து வருகிறார் விஜயலக்ஷ்மி.கன்னடத்தை தாண்டி வெளியில் இவர் பெரிதாக எந்த திரைப்படமும் நடிப்பதில்லை.

இந்நிலையில் துங்கபத்ரா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆஞ்சநேயா மீது விஜயலட்சுமி காதல் கொண்டார். இருவரும் வெகு நாட்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.இது திரையுலகத்திற்கே தெரிந்த விஷயம்தான்.

விஜயலட்சுமியின் காதலை அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரகசிய திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்த பின்பு காதல் திருமணம் செய்த கணவருடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துடன், தனது பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் விஜயலட்சுமியின் பெற்றோர் இது பொய் குற்றச்சாட்டு என்றும் தனது மகள் உயிருக்கு ஆபத்து என்றும் புகார் அளித்துள்ளனர்.விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும்.