பிரபல நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர் !! இளைஞரின் முகத்தை வெளியிட்டு, அசிங்கப்படுத்திய நடிகை !! ஷாக்கான ரசிகர்கள் !!

நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர்தான் ஸ்வேதா. இந்த படத்தில் கிடைத்த புகழ் காரணமாக நந்திதாவை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.அன்றிலிருந்து நந்திதா ஸ்வீத என்றே திரையுலகில் அழைக்கப்பட்டார்.

தமிழில் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படமே அவருக்கு ஒரு வெற்றிப்படம்தான்.இந்த படத்தின் கதை இவரை சுற்றியே நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது படங்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவருகிறார் நந்திதா.அவ்வப்போது பதிவுகள் போட்டு வரும் அவர் தற்போது டிக்டாக்கிலும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவரை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வந்த வாஞ்சி செழியன் என்ற நபர் தொடர்ந்து இவருக்கு ஆபாச மெசேஜுகள் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த நந்திதா அவருக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்.

அவர் அனுப்பிய மெஜேசுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவரது பக்கத்தில் பதிவுசெய்து அவருடைய முகத்திரையை கிழித்துள்ளார் நந்திதா.மேலும் இதுபோன்ற கீழ்த்தரமான புத்திகொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept