விஜய் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் !! குருவி படத்தை கிண்டல் செய்த நடிகர் பவன் பேட்டி !!

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டான திரைப்படம் அசுரன்.இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார்,பசுபதி கருணாஸ் மகன் கென் கருணாஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் நடித்திருந்தார்.நடிகர் பவனுக்கு வெற்றிமாறன் திரைப்படங்களில் எப்போதுமே ஒரு கதாபாத்திரம் இருக்கும்.

இந்தநிலையில் தற்போது அசுரன் திரைப்படத்தின் 100 நாட்கள் விழா நடந்தது.விழாவில் படத்தின் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.இந்தப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் இந்த திரைப்படம்தான் அதிகமான வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பேசிய நடிகர் பவன் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென நடிகர் விஜயை சாடுவது போல பேசினார்.100வது நாள் கொண்டாட்டம் என்பது கடைசியாக விஜயின் குருவி படத்திற்கு சொன்னதாக ஞாபகம் என மேடையியேயே கூறினார்.இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

பிறகு சுதாரித்துக்கொண்ட தனுஷ் பேசியபோது இதுபோன்ற விழாக்களில் பேசும்பது நம்மை மீறி பேசி விடுவோம்.அனால் அதில் எடுக்கவேண்டியதை மட்டும் எடுத்திகிட்டு மடறதை விட்டுவிடுங்கள் எனக்கூறினார்.மேலும் இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்தது.

இந்தநிலையில் தற்போது பவன் அந்த விசயத்திற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.தான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.