தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படுபவர் தான் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த இவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக வளம் வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று திடீரென பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85 ஆகியுள்ளதாம்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளது எல்லோரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.