நடிகர் எம்.ஜி.ஆர் கால கட்டங்களில் இருந்து பல நடிகைகள் இன்று உள்ள பல நடிகர்களுக்கு அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சத்தியப்ரியாவும் ஒருவர். இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.

இவர் இதுவரை கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. அதிலும் ஐம்பது திரைப்படங்களுக்கும் மேலாக இவர் கதாநாயகியாகவும் கூட  நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் மஞ்சள்  முகமே வருக. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கால கட்டங்களில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை சத்யபிரியா தமிழ் திரைப்படத்தில் வந்த காலத்திலிருந்து நடிகர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் நடிகை சத்யபிரியா தமிழ் திரைப்படத்தில் இருந்து விலகி தற்போது சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சத்யப்பிரியாவுக்கு சினிமா நடிகைகள் போன்று இரண்டு மகள்கள்  உள்ளனர். அந்த வகையில் தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வாயைப் பிளந்து பார்த்து வருகின்றார்கள். ஒரு சிலர் அந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு இன்னும் வயது ஆகாமல் இளமை போன்று இருக்கின்றீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்…

By marvel

You missed