விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ். இவருக்கு தற்போது 41 வயதாகிறது. இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தார் நடிகர் சதீஷ். அது மட்டுமல்லாமல் இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

மேலும், பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மந்திரவாசல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். அந்த வகையில் கல்யாண பரிசு 2, ஆனந்தம் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஷ் கீதா விஜயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதனை தொடர்ந்து அந்த சீரியலில் அவருடைய நடவடிக்கையை பார்த்து  பலரும் அவரைத் திட்டி வந்தனர். இதனை தொடர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவை பார்த்து பலரும் இவர் சிறு வயதிலேயே இவ்வளவு கஷ்டங்கள் பட்டு விட்டாரா  என்று பலரும் கூறினார்கள். அது என்னவென்றால் நான் என்னுடைய ஐந்து வயதில் என்னுடைய  சொந்த தம்பியை இழந்தேன். அதன் பிறகு அம்மா அப்பாவை விபத்தில் பறிகொடுத்தேன்.

அதன் பிறகு யாரும் இல்லாமல் சென்னையில் உள்ள என்னுடைய அத்தை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவர்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்கள். அவர் தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து எல்லாம் செய்து கொடுத்தார். அவர் ஒரு மிகச் சிறந்த பெண்மணி என்று அவர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது ரசிகர்களை கவர்ந்து உள்ளதாக கூறப்படுகின்றது…

By marvel

You missed