48 வயதில் மீண்டும் கர்ப்பமா...? பொன்னியின் செல்வன் பட டீசர் விழாவிற்கு வராததற்கு இது தான் காரணமா ..? வைரலாகும் வீடியோ

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் ஆகிய சில திரைப்படங்களில் மட்டுமே தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

மேலும், தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அவரது சமீபத்திய புகைப்படங்கள் தான்.

ஆம், அண்மையில் தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட்டையும் போட்டிருந்தார். இதை பார்த்த பாலிவுட் ஊடகங்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை மறைக்கவே ஓவர் கோட்டை அணிந்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இதனால் தான் அவர் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் கூட கலந்து கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

By marvel

You missed