48 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கை..!! அதற்கு காரணம் என்ன தெரியுமா..? அவர் கூறிய காரணத்தைக் கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 90s களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. இவர் தமிழில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்து இருந்தவர். இவர் தனது சினிமா பயணத்தை தனது முதல் படமான புது புது அர்த்தங்கள் என்னும் படத்தின் மூலம் தொடங்கினார்.

பின்பு படிப்படியாக முன்னேறி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் இவருடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அனைவரும் திருமணம் ஆகி தங்களது குடும்பத்துடன் இனிமையாக வாழ்ந்து வருகிறார்கள்

தமிழில் புது புது அர்த்தங்கள், புதுவசந்தம், முகவரி, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சித்தாரா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சித்தாராவுக்கு தற்போது 47 வயதாகிறது. ஆனாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாரா ஒரு பேட்டியில் முன்னர் ஒரு முறை  கூறியிருந்தார்.

அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் தான் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்து போனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.

அவர் மறைவுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஏற்ற மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். ஆனால் திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இப்போது வரை இல்லை எனக் கூறியுள்ளார்.

By marvel

You missed