தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நக்மாவின் இயற்பெயர் நந்திதா அர்விந்த் மொகர்ஜி. இவர் இந்தி, தெலுங்கு, சைனீஸ், தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, மராத்தி என அனைத்து மொழிகளிலும் வலம் வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார். மேலும் 46 வயதான நக்மாவிற்கு தற்போது வரை திருமணத்தின் மீது நாட்டம் இல்லாததற்கு காரணம் அவரது கடந்த காலத்தில் ஏற்பட்ட காதல் வாழ்க்கையே ஆகும்.

நக்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலிங்கும் காதல் இருந்தது. கங்குலிங்கு திருமணமான விஷயம் தெரிந்தும் நக்மா அவரை காதலித்து வந்தார். அதன் பின் கங்குலி தன் குடும்பத்தைக் கருத்தில் கொண்டு நக்மாவுடன் இருந்த பழக்கத்தை தவிர்த்து விட்டதாக செய்தி வெளியானது. அதன் பின் நக்மாவின் காதல் தமிழ் நடிகர்கள் சங்க தலைவராக இருந்தவரும், சுப்ரீம் ஸ்டாருமான சரத்குமாருடன் தொடர்ந்தது.

நக்மாவுக்கும், சரத்குமாருக்கும் இடையேயான பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தது. சரத்குமாரின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிய வர அது புயலாக மாற உடனே நக்மாவுடனான பழக்கத்தை கை விட்டார் சுப்ரீம் ஸ்டார். அதன் பின் அமைதியாக இருந்தாரா நக்மா. மீண்டும் திரைப்பட நடிகரான ரவி கிஷனுக்கு காதல் வலையை வீ சினார். ஆனால் அதுவும் செட் ஆகவில்லை.

இனி யாரையும் காதலிக்கப் போவதும் இல்லை. திருமணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். நக்மா காதலித்ததில் தப்பு இல்லை ஆனால் யாரை காதலிக்க வேண்டும் என்பதில் தான் தவறு செய்து விட்டார். இல்லை என்றால் நக்மாவும் திருமணமாகி அவரது மகனோ மகளோ இந்நேரம் திரையுலகில் வலம் வந்திருப்பார்கள்..

By marvel

You missed