44 வயதில் இத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்படும் பிரபல இயக்குநர்..!! ஏங்க உங்களுக்கு மூணு பத்தலையா என வெளுத்து வாங்கும் மனைவி..!! அந்த இயக்குனர் யார் தெரியுமா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலர் இருந்து வரும் நிலையில் ஆரம்பத்திலேயே பெரிய வெற்றியை கொடுத்து பிரபலமானவர் இயக்குநர் செல்வராகவன். தன்னுடைய தம்பி தனுஷை வைத்து பல படங்கள் இயக்கி மிரட்டி இருக்கிறார் செல்வராகவன். பிறகு நடிகை சோனியா அகர்வாலை முதல் மனைவியாக திருமணம் செய்தார். சில காரணங்கள் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து விவாகரத்து பெற்ற அடுத்த வருடமே கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொகுப்பாளரும் இயக்குநருமான பரத்வாஜ் அவர்களின் பேட்டியொன்றில் கலந்து கொண்டு நெஞ்சம் மறப்பதில்லை படத்தினை பற்றியும் சினிமா அனுபவங்களை பற்றியும் கலந்துரையாடினார்.

இயக்குனர் செல்வராகவனிடம் சமீபத்தில் உங்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி கேட்க, தனக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது எனவும் இன்னும் ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது குறித்து தன்னுடைய மனைவியிடம் பேசினால் சண்டைக்கு வருகிறார் என ஜாலியாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இருவருக்கும் மூன்றாம் குழந்தை பிறந்தது. அப்படியிருக்க செல்வராகவன் கூறியதை பார்த்து பல ரசிகர்கள் கருத்துக்களை கண்டபடி கூறி வருகிறார்கள்.

By marvel

You missed