ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் தான் சௌந்தர்யா.

அவருக்கும் அப்பாவைப் போலவே சினிமாவில் ஈடுபடு இருந்ததால், ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படமும் இயக்கினார்.ஆனால் இருவருக்கு எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை. இதையடுத்து, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது.

பின் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

அதுக்கு பின் 2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடியை மறுமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா தம்பதியரின் முதல் குழந்தையுடன் கர்ப்பமானார். சமீபத்தில் வளைகாப்பு விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வணங்காமுடி இல்லத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அக்டோபரில் பிரசவத்திற்கு டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா-தனுஷ் பிரிந்ததால் கலக்கத்தில் இருந்த ரஜினிகாந்த் குடும்பம் புதிய வரவால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி நான்காவது முறையாக தாத்தாவாக தயாராகி உள்ளார். ரஜினி குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

By Spyder

You missed