3 தலைமுறைகளாக நடித்தும் இன்னும் திருமணமாகாத பிரபல நடிகை! அவரது நடிப்பை பார்த்து மி ரண்டு போய் வாய்ப்பு கொடுத்த கமல்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளை தாண்டி குணச்சித்திர வேடங்களில்  நடிப்பவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் மகாநதி, தேவர் மகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் தான் எஸ் என் லெட்சுமி.

இவர் 11 வயதில் தனது பெற்றோரை இழந்த லெட்சுமி வாழ்க்கையில் பெரும் கஷ்டத்தை அனுபவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் 3 தலைமுறையாக நடித்த நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

மேலும் இவர் கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் எஸ் என் லெட்சுமி. தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை சந்திரலேகா என்ற பிரம்மாண்ட படத்தில் குரூப் டான்ஸராக சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

அதற்குப் பின்னர் நாகேஷ், கே பாலசந்தரிடம் அழைத்துச் சென்று சர்வர் சுந்தரம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்த படத்திலிருந்து தான் இவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி, தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நாகேஷ், சிவாஜி போன்ற பிரபலங்களுடன் நடித்து அதற்குப் பின்னர் கமல்ஹாசனுடன் தேவர்மகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து விட்டார். தேவர்மகன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து கமலஹாசன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தாராம்.

அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி திறமை கொண்டிருந்த லெட்சுமி. சினிமா வாழ்க்கையை நம்பி கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவரின் அண்ணன் குழந்தைகளை பார்த்துக் கொண்டதும், முதிர்ந்த வயதில் அவர்கள் லெட்சுமியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டது தான் காரணமாம்.

இப்படி தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து சாதித்தவர் தான் லெட்சுமி. சரவணன் மீனாட்சி மற்றும் தென்றல் போன்ற இந்த சீரியலில் இறப்பதற்கு முன்னதாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

By marvel

You missed