பிரபல நடிகை ஷகிலா குக் வித் கோமாளி ஷோவுக்கு இந்த வாரம் திரும்பி வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள்.
செட்டுக்குள் வந்ததும் ஷகீலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என குறிப்பிட்டு புகழ் உருகினார்.
அப்போது கோமாளியாக வந்திருக்கும் ஷீத்தலை பார்த்து அவருக்காக தான் இந்த சீசன் பார்பதாக ஷகீலாகூறினார். ஏனெனென்றால் அவரது தங்கை பெயரும் அதே தான்.
விஜய் உடன் ‘ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி’ பாடலில் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். அவர் 23 வயதிலேயே இறந்துவிட்டார் என ஷகீலா உருக்கமாக பேசினார்.