20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை நீலீமா ராணியின் கணவர் யார் தெரியுமா ?? பலரும் பார்த்திராத புகைப்படங்கள் !!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பல முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை நீலிமா ராணி . இவர் தமிழ் சினிமாவில் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். குழந்தைப்பருவத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி மற்றும் உலக நாயகனுடன் நடிக்கும் பெறும் வாய்ப்பைப் பெற்றவர்.

அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இவர் சுமார் 50 சீரியல்களிலும் 30கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாணி ராணி , செல்லமே என என பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது அரண்மனை கிளி சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் தனியாக ஒரு சீரியலை தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார் நடிகை நீலிமா. இவரது தயாரிப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தற்போது 500 எபிசோடுகளை கடந்து வந்துள்ளது .

நீலிமா ஒரு மிடில்கிளாஸ் பெண்ணாகத்தான் வாழ்ந்து வந்தார். தான் வேலைக்கு சென்றால் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தினாலும் சினிமாத்துறையில் நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

இவர் திமிரு , நான் மகான் அல்ல, இதயத்திருடன் , பாண்டவர் பூமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நான் மகான் அல்ல திரைப் படத்தில் நடித்ததில் இவருக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது. பின்னர் தனக்கு இருபது வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இசை என இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு மகள் உள்ளார். இந்த தம்பதியினர் அவரது குழந்தையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.