தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் நடிகை சரிதா. இவர் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். எப்போதுமே குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கொண்ட இவர் 150 திரைப்படத்திற்கும் மேல் நடித்திருக்கிறார்.

நடிகை சரிதா தனக்கு 16 வயது இருக்கும்போது சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் திருமணம் செய்துகொண்ட ஆறே மாதங்களில் அவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தார். அதன் பின்பு சினிமாவில் கால் பதித்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

நடிப்பு ஒன்றே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த அவர் கடந்த 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகரான முகேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தவுடன் கணவர் குடும்பம் என செட்டிலாகிவிட்டார். ஆகையால் சினிமாவின் பக்கமே வராத இவர் தற்போது நடிகை ஸ்ரீபிரியா உடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார் .

அந்த புகைப்படத்தை ஸ்ரீபிரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் . இதனை பார்த்த ரசிகர்கள் சரிதாவா இது? என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஒரு சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு சரிதாவை பார்த்து மகிழ்ச்சி எனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சரிதாவின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை சரிதா 2011 இல் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தனது மகன் ஷ்ரவனுடன் துபாய் யுஏஇயில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சரிதாவும், நடிகை ஸ்ரீபிரியாவும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர். அந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா ட்விட்டரில் போட அது இணை யத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சரிதாவா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.

By marvel

You missed