1500 படங்களுக்கு மேல் நடித்தும் பிரபல நடிகையின் வாழ்க்கையில் தொடர்ந்து நடந்த சோகங்கள்..!! அந்த நடிகை யார் தெரியுமா..? பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பல உண்மைகள்..!!

நகைச்சுவை நடிகை மனோரமா ஆச்சி ஒரு பிரபல தமிழ் நடிகை. இவர் ஏராளமான படங்களில்  நடித்துள்ளார். நடிகை மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே கலங்க வைத்தது. அவரின்  இழப்பு தமிழ் சினிமாவுக்கே ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு. நடிகை மனோரமா ஆச்சி தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் எனப் பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில்  பெற்றவர்.

மேலும் 1500-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் குடியில் இருந்து வந்து மாபெரும்  கலைஞராக தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

இவரை அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா அவர்கள். தமிழ் மட்டுமே பேசத் தெரிந்தாலும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழித் திரைப்படங்களில் நடித்தவர். தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் எனப் பல இன்னல்களை அவர் சந்தித்தார்.

நாடகங்களில் தன்னுடன் நடித்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து  திருமணம் செய்து கொண்டார் நடிகை மனோரமா. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார்.

மேலும் கடைசி காலத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் மாரடைப்பால் நடிகை மனோரமா இறந்து  போனார். தற்போது மனோரமாவின் பேரன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரும் சில காலத்தில் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு நடிகராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

By marvel

You missed