சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். கமல் நடித்த தேவர் மகன் படைத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். சினிமாவில், நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து கவனத்தை பெற்றார்.

இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நீலிமா சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.இதன் பின்னர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த இவர், அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார்.

இதனிடையே, சில மாதத்திற்கு முன் நீலிமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட திருமணமாகி 13 ஆண்டுக்கு பின் தான் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.நேற்று புத்த பௌர்ணமியை முன்னிட்டு தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா. தனது மகனுக்கு அத்வைத்தா என்று பெயர் வைத்துள்ளார்.

மேலும், தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

By Spyder

You missed