ஆதித்யா சேனலில் லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் தாப்பா. நேபாளி பெண்ணான  இவர் அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் என சில படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கும் இவரிடம் பல பேட்டிகளில் எப்போது திருமணம் என பலரும் கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் ரகு என்பவரை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ள அவர் காதல் திருமணம் கைகூடிய சந்தோஷத்தில் திளைத்துள்ளார். இது குறித்து தாப்பா கூறுகையில், எங்களுடைய காதல் பத்து வருஷ காதல். எத்தனையோ தடைகள், பிரச்சனைகளை தாண்டி இருவரும் கரம் பிடித்திருக்கிறோம். மிகவும்  சந்தோஷமாக இருக்கு. எங்களுடைய வீட்டில் சம்மதம் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம்.

இப்போதுதான் இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு. என் கணவர் பெயர் ரகு. இவர் பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் என பல நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக இருக்கிறார் என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

By marvel

You missed