10 மாத கர்ப்பத்தை மறைத்து குழந்தை பெற்ற பிரபல இளம் நடிகை..! என்ன குழந்தை தெரியுமா...? 1 வருடம் கழித்து வெளியான ரகசியம்..!!

திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஸ்ரேயா, முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ.. பார்க்கும் ரசிகர்களையே  அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் வணக்கம் மக்களே… கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தனிமை படுத்துதல் நேரத்தில், எங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவதையை நான் பெற்றெடுத்துள்ளேன். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு, பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

By marvel

You missed