வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்...!! சிம்பு திருமணம் குறித்து என்ன பேசியுள்ளார் தெரியுமா...?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவர் சந்தித்த பிரச்சனைகளைப் போல் மற்ற நடிகர் யாராவது எதிர் கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களிடம் பெறுவார்களா என்றால் அது சந்தேகம் தான். சிம்புவின் கடினமான நேரத்தில் அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் இருந்துள்ளார்கள்.

இப்போது அவர் உடல் எடை எல்லாம் குறைத்து சுறுசுறுப்பாக படங்கள் நடிக்கத்  தொடங்கி விட்டார். இதற்கு இடையில் சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் அவர்கள் இன்று அதிகாலை சென்னை வந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார். சென்னை வந்த டி ராஜேந்தர் தனது ரசிகர்களுக்கு, தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு, இருமனம் ஒன்றுபட்டால் திருமணம் கடவுள் எழுதியது தான் நடக்கும். காலச்சக்கரம் சூழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள், மருமகள் வருவாள் கடவுள் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது. சிம்புவின் நல்ல மனதிற்கு நல்ல பெண் கிடைப்பார் என்றும் திருமணம் என்பது எல்லாம் நாம் நினைப்பது மாதிரி நடக்காது, கடவுள் நினைக்க வேண்டும் என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.

By marvel

You missed