தொகுப்பாளினிகள் என்றால் முதலில் குரல் நன்றாக இருக்க வேண்டும், ஆனால் குரல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் ஜாக்குலின். அந்த வகையில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த, ‘கலக்கப் போவது யாரு’ காமெடி நிகழ்ச்சியின் 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டாலும், அந்த படங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கிய இவர் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், தேன்மொழி பிஏ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தேன்மொழி சீரியலை முடித்ததும் ஜாக்குலின் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்குவார் என்று பார்த்தால் அவர் விஜய் டிவி பக்கமே வருவதில்லை, மாறாக வேறொரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்..
அதாவது அவர் கடுமையாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். இப்போதே அவர் பார்க்க உடல் எடை குறைத்து அழகாக காணப்படுகிறார். பார்ப்பதற்கு பப்லியாக… கொழு கொழுவென இருக்கும் ஜாக்குலின், தற்போது பல்வேறு ஹெவி ஒர்க்அவுட் செய்து தன்னுடைய எடையை பாதியாக குறைத்துள்ளார். தற்போது செம்ம ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ள ஜாக்குலினின், ஒர்க் அவுட் வீடியோ வெளியாகி பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் சிலர், ஜாக்குலின் ஹீரோயினாக முயன்று வருகிறார் போல, அதனால் தான் இப்படி பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார் என கூறி வருகிறார்கள். பார்ப்பதற்கு பப்லி பெண்ணாக இருந்த ஜாக்குலினின் இந்த நியூ ட்ரான்ஸ்பர்மேஷன் பார்பவர்களையே பிரமிக்க செய்தாலும், இவரது இந்த விடா முயற்சிக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram