வீட்டிற்கு தெரியாமல் கமலுடன் வடிவுக்கரசி செய்த காரியம் !! அடித்து துவைத்த அப்பா !! கலவர பூமியான வீடு !!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த வடிவுக்கரசி முதல் படத்தில் நடித்த போது அவரது அப்பாவிடம் அடிவாங்கியதை தற்போது கூறியுள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கிய இவர், 350 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் சினிமாவிற்குள் நுழைந்ததை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவராம். இவரது தந்தையின் பெயர் சண்முகம். சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட இவர் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்து வந்ததுடன், சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது பைனான்ஸ் கம்பெணி தீவாலாகியதால், சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் படிப்பைத் தொடர்ந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பியுசி படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

அத்தருணத்தில் தூர்தர்ஷனில் ‘கண்மணி பூங்கா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து பள்ளி ஒன்றில் ரூ.75க்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். பின்பு புடவைக்கு டிசைன் போடும் கம்பெனியில் வேலை செய்த போது, கடை உரிமையாளர் பிரபல ஹொட்டல் ஒன்றிற்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கு சேர்த்துள்ளார்.

அங்கு நடிப்பதற்கு இவரிடம் கேட்ட போது, வேண்டாம் என்று மறுத்ததோடு, எதையும் நினைக்காமல் தனது வேலையை செய்து கொண்டிருந்துள்ளார். அத்தருணத்தில், உடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்தருணத்தில் கன்னிப் பருவத்திலே என்ற படத்தில் வீட்டிற்கு தெரியாமல் நடித்துள்ளார். பின்பு பாரதி ராஜா படமான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் கமல் சாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்பொழுது ஒரு சீன் எடுப்பதற்காக பாரதிராஜா, வடிவுக்கரசியை வீட்டிற்கு வந்தது அழைத்தது மட்டுமின்றி, அவரது புகைப்படத்தினையும் தந்தையிடம் காட்டியுள்ளார்.

அப்பொழுது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தனது தந்தை தன்னை பயங்கரமாக அடித்ததாகவும், அத்தருணத்தில் தங்களது வீடு கலவர பூமியாக இருந்தது என்று தான் சினிமாவிற்குள் வந்த கதையினைக் கூறியுள்ளார்.