விஜய் பட நடிகைக்கு விரைவில் திருமணம்? யார் தெரியுமா...? பிரபல மலையாள ஹீரோவை கரம் பிடிக்கிறாரா...?

தமிழில் 180, வெப்பம், மெர்சல், ஓகே கண்மணி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நித்யா மேனன். அவரின் கியூட்டான நடிப்புக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். இது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடைசியாக சைக்கோ படத்தில் நடித்திருந்த அவர் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் வேறு சில மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீப காலமாக நித்யா மேனன் திரைப்படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்றும், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஒரு பிரபல மலையாள ஹீரோ ஒருவரை நித்யா மேனன் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை கரம் பிடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நித்யா மேனன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியிடவில்லை.

By marvel