வயசானா லவ் பண்ணக் கூடாதா.. இது என்ன அநியாயம்...!! கூண்டில் ஏற்றப்படும் கோபி..! நடிகர் சதீஷ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் ராதிகாவுடனான காதல், ராதிகா மற்றும் பாக்கியாவிற்கு தெரியாமல் இருக்க பல தகிடு தத்தங்களை செய்து வந்தார் கோபி. இந்நிலையில் ராதிகாவுடனான அவரது காதல் தற்போது இருவருக்கும் தெரிந்து விட்டது. அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது.

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துள்ளது. பரபரப்பான கட்டங்களை ரசிகர்களுக்கு இந்தத் தொடர் தற்போது கொடுத்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்தத் தொடரை பார்த்து வருகின்றனர்.

பாக்கியா, ராதிகா மற்றும் கோபி என்ற மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே இந்தத் தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பாக்கியா என்ற அப்பாவி மனைவி, தன்னுடைய தாய் தந்தையர், திருமணமான மகன், மற்றொரு மகன் மற்றும் மகள் என அன்பான குடும்பத்துடன் நிம்மதியாக இருந்த கோபி தான் ராதிகாவுடன் காதல் வயப்படுகிறார்.

இந்தத் காதல் அவரது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே இந்தத் தொடரின் கதைக்களம். இந்தக் காதலை மறைக்கும் வகையில் கோபி செய்யும் கோல்மால் வேலைகள் அனைத்தும் வேறு லெவலில் காணப்பட்டது. அவர் எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் காதலி ராதிகாவிற்கு உண்மை தெரியவர, அவர் கோபியை வீட்டை விட்டு போகும் படி ஆத்திரத்துடன் கூறுகிறார். தொடர்ந்து ராதிகாவின் கணவன் ராஜேஷ், இந்தக் காதலை கோபியின் வீட்டிற்கு சென்று ஆதாரத்துடன் புட்டு புட்டு வைக்கிறார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர்.

தொடர்ந்து கோபி விபத்து ஒன்றில் சிக்குகிறார். இதையடுத்து அங்கு வரும் ராதிகா, கோபியின் மனைவியாக அவருக்கு மருத்துவ பில்களை செட்டில் செய்கிறார். இதை பார்க்கும் மனைவி பாக்கியா பரிதவிக்கிறார், கோபம் கொள்கிறார், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்.

தொடர்ந்து கணவனை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். இதனால் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பதாக எபிசோட் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கேரக்டரில் நடித்துவரும் நடிகர் சதீஷ், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இனி அடுத்த வாரம் முழுவதும் கூண்டில் நிற்க வைக்கப்படும் குற்றவாளியாக கோபி இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். கோபி காதலுக்காக பொய், பித்தலாட்டங்களை அதிகமாக செய்த நிலையில் இதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

வயதானால் லவ் பண்ணக்கூடாது என்று சட்டம் காணப்படுவதால், பாவம் கோபி என்றும் அந்த வீடியோவில் சதீஷ் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சதீஷ். அவரது இந்த கேரக்டர் பெண்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் அந்த அளவிற்கு அவர் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக்கியுள்ளதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel

You missed