விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்ததால், சீரியலில் இருந்து வெளியேறினார்.இவருக்கு பதிலாக அறிமுக நடிகை ரியா, சன்கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார்.

இந்த சீரியல் தற்போதும் விறுவிறுப்போடு சென்றுகொண்டிருக்கிறது.ஆலியா மானசாவின் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்துகொண்டிருக்கிறார் ரியா.

இந்நிலையில், இவரை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகபோகதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலுக்காக விஜய் டெலிவிஷன் விருதை வென்ற நடிகை அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

By Spyder

You missed