ராஜா ராணி சீரியலில் அம்மாவாக நடிக்கும் பிரவீனா இந்த பிரபல நடிகையின் தங்கையா?? அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே !! நீங்களே பாருங்க !!

இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான்.அதுவும் இப்போது உள்ள சீரியல் தொடர்கள் எல்லாம் ஒரே கதைகளத்தை கொண்டாலும் அதை மக்களுக்கு புடித்தவாறு அமைத்து வருகிறார்கள் அந்நிறுவனங்கள்.மேலும் அதில் தமிழில் வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பல உள்ளது.

அதில் சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்னும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது.மேலும் அந்த சீரியல் தொடரில் பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அதில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா அவர்கள் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் இவர் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

80 மற்றும் 90களில் நடித்து வரும் பல நடிகைகள் வெள்ளித்திரையை விட்டு சின்னத்திரையில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க வெள்ளித்திரையில் கதாநாயகியாக களம் இறங்கியவர் நடிகை பிரவீனா.இவர் மலையாள மொழி சினிமா துறையில் தனது முதல் படமான 1992 ஆம் ஆண்டு வெளியான கௌரி என்னும் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மேலும் இவர் அதனை தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் அறிமுகமான படம் 2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமானார்.அந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடித்த படங்களான கோமாளி சாமி என பல படங்களில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரவீனா அவர்கள் 60களில் பிரபல நடிகையான ஸ்ரீவித்யா அவர்களின் தங்கையாவார்.நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகை பிரவீனா அவர்கள் பிரியமானவள் சீரியல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.