ரம்யா மீதுள்ள காதலை முதல்முறையாக வெளிப்படுத்திய சோம் சேகர் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. ஒவ்வொரு சீசனிலும், ஒரு காதல் ஜோடியாவது சேர்த்துவிடுவார்கள் விஜய் டிவி. அந்த வகையில் இந்த சீசனில் அப்படி ஒரு காதல் கதையை பார்க்க முடியவில்லை.

ஆனாலும், ஷிவானி பாலாஜி காதல் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் திடீரென பாலாஜி ஒரு கட்டத்தில் சிவானி மீது காதல் இல்லை எனவும் அப்படி காதல் வந்தால் சொல்கிறேன் எனவும் கூறினார்.

மேலும், ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம்.

ஆனால், ஒருபக்கம் சத்தமே இல்லாமல் காதலை வளர்த்து வந்துள்ளார்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி.

என்னதான், ரம்யா பாண்டியனுக்கு சோமை பிடிக்கவில்லை காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், சோம் சேகர் ஆரம்பத்தில் இருந்தே ரம்யா பாண்டியன் மீது காதலாக இருந்தார்.

இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூத்து என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம் சேகருக்கு ரசிகர்கள் அனுப்பிவிட,.

அதனை காதல் ரசம் வழிய வழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார். இதனால், ரசிகர்கள் சோம் சேகரின் காதலை நக்கலடித்தும் வருகின்றனர்.