காமெடி நடிகர் ரோபோ சங்கரை பிரபல நடிகரான விஷால் மேடையில் வைத்து தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரம்மாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள்.

அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பேசிக் கொண்டிருந்த ரோபோ ஷங்கரை திடீரென விஷால் தாக்கியுள்ளார்.

அருகில் நின்று இதனை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சூரி தான் செய்வதரியாது கீழே இறங்கினார். அப்பொழுது தான் அவர் விளையாட்டிற்கு இதனை செய்ததாகவும், இவர்கள் மூன்று பேரும் இவ்வாறு அடிக்கடி அடித்து விளையாடுவதாகவும் கூறியுள்ளார். என்ன விளையாட்டு இதெல்லாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By marvel

You missed