மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை !! 12 மணிநேரத்துக்கு பின் கிடைத்தது என்ன தெரியுமா ?? அ தி ர் ச் சியாகிடுவீங்க !!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும், திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறை அலுவலா்கள் நடத்திய சோதனை 12 மணிநேரம் கழித்து நிறைவு பெற்றுள்ளது.அதில், வீட்டுச் செலவுக்காக ரூ 1.36 லட்சம் மட்டுமே இருந்தது என்று கூறப்படுகிறது.

இந்த ரெய்டு குறித்து ஆர் எஸ் பாரதி கூறுகையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்த பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையின் நடத்திய இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.