நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படம் 3. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தவர் அனிரூத் ரவிச்சந்திரன்.

இதன்பின் தனுஷ், விஜய், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பெரிய ஹிட் கொடுத்தும் இருக்கிறார். இசை ஒரு பக்கம் இருக்க அனிரூத் திருமண வயதை எட்டியுள்ளதால் அவரது குடும்பத்தினர் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளதாக் செய்திகள் வெளியானது.

இதனால் அனிருத் யாரை திருமணம் செய்யவுள்ளார் யார் அந்த நடிகை என்றெல்லாம் கிசுகிசு செய்திகள் வெளியானது. அதிலும் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கல்யாண பொண்ணு என்று கூட வதந்தி செய்தியை பரப்பினர்.

அதன்பின் அனிருத்தின் இசையில் சமீபகாலமாக பாடிவரும் ஜோனிதா காந்தியை கூட இந்த விசயத்தில் இழுத்தனர். அனிருத்தை கல்யாணம் பண்ண ஆசை என்றும் சமீபத்தில் பாடகி ஜோனிதா காந்தி மேடையில் தெரிவித்தார்.

இந்நிலையில், அனிருத் பழகிய நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

By Spyder

You missed