விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ள இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் நம்பர் 1ல் உள்ளது. இதில் மீனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். யதார்த்தமான நடிப்பால் பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்த போதிலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று சொல்லலாம். இயல்பான பேச்சும், சிரிப்பும், யதார்த்தமான நடிப்பும், கணவன் வீட்டையும் விட்டுக் கொடுக்காமல், தந்தையையும் விட்டுக் கொடுக்காமல் நடுவில் இருந்து படாதபாடு படும் இவரின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஹேமா டைரி என்ற யூடியூப் பக்கத்தக கொரோனா காலத்தில் தொடங்கினார். தொடங்கிய சில நாட்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுவிட்டார். தற்போது இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட “எனக்கு ஆப்ரேஷன்” என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மருத்துவமனையில் அட்மிட் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துள்ளார் மீனா. பொதுவாகவே பெண்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் மார்பக புற்றுநோய். முதலில் சிறு கட்டி போல ஆரம்பிக்கும் அந்த நோய் நாளடைவில் பல சிக்கல்களை உண்டாக்கிவிடும் எனவே தான் மருத்துவர்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய அறிவுறுத்துவது உண்டு.

அது போன்ற 4 செ.மீ அளவுள்ள கட்டி ஹேமாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் பயந்து போன ஹேமா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது புற்றுநோய் கட்டியாக இருக்ககூடும் என பயந்துள்ளார் ஹேமா. ஆனால் அது புற்று நோய் கட்டியல்ல. சாதாரண கட்டிதான் என்றாலும் அதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் ஆப்ரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்கியுள்ளனர் மருத்துவர்கள் தற்போது குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். பெண்கள் தங்கள் உடலில் இது போன்ற கட்டிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை சென்று ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் ஹேமா. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

By admin

You missed