மாப்பிள்ளை இமேஜை டோட்டல் டேமேஜ் செய்ய கொழுந்தியாள்கள் !! அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா ?? நீங்களே பாருங்க !!

மாக்கினாம்பட்டி அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாப்பிள்ளையை கேலி செய்து கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணத்தின் பழக்க வழக்கங்கள் வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபட்டே இருக்கும்.

ஒரு சில திருமண பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். மற்றும் சில திருமணங்களில் நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பது வழக்கமாக இருக்கும்.

அந்த வகையில், திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையை கேலி செய்யும் வகையில் நகைச்சுவை வரிகள் கொண்டு அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும், தங்க காசுகளை கேட்பதில் முடிவடைந்தது. இந்த பாடலை உறவினர்கள் அனைத்து சிரித்து சிரித்து ரசித்ததில் டோட்டல் டேமேஜான மாப்பிள்ளை இறுதியில் வெட்கப்பட்டு நின்றார்.