இணைய உலகம் பலவிதமான ஆச்சர்யங்களை நமக்கு அள்ளிக் கொடுப்பதில் நம்மை எப்போதும் ஏமாற்றுவதே இல்லை. அந்த வகையில் தற்போது காட்டு வெள்ளெலி ஒன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த எலி, மிகவும் தேர்ந்த மாடல் அழகி போல் போஸ் கொடுப்பது இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மனதை கொள்ளை கொள்ளும் இந்த படங்கள், பல கேமரா கோணங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் கண் கொள்ளாக் காட்சி என ரசித்து மகிழ்கின்றனர்.
Have you ever seen a wild hamster doing a photoshoot? 😊
🎥 @radwildlife pic.twitter.com/gzGZxbLhL6
— Buitengebieden (@buitengebieden) July 22, 2022