தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா, இவருக்கு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார், இதனிடையே 48 வயதான மீனா கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவு காரணமாக நேற்று திடீரென சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தற்போது நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

By admin

You missed