தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் கடந்த ஆண்டு தம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கிரிக்கெட் பயிற்சியாளரான ரோஹித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் நடந்த திருமணத்திற்கு ஒருசிலரையே வரவழைத்து நடத்தியிருந்தார் சங்கர். அதை போக்க பிரம்மாண்ட முறையில் மே முதல் வாரத்தில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதை திடீரென நிறுத்தி இருக்கிறார் சங்கர். அதற்கு காரணம் மருமகன் செய்த வேலைதான். ரோஹித் பயிற்சி கொடுத்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் போக்சோ சட்டம் பாய்ந்தது. தற்போது அப்பெண் புகாரளித்ததில் சங்கர் மருமகன் ரோஹித் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இதனால் தான் சங்கர் அதை நிறுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தால் மகள் வாழ்க்கை போச்சே என்று சோகத்தில் என்ன செய்வது தெரியாமல் இருந்து வருகிறார். சந்தோஷயத்தை இழந்த மகளிடம் விவாகரத்து செய்ய சங்கர் குடும்பத்தினர் யோசனை கூறியுள்ளார்களாம்.

திருமணமாகி 6 மாதங்களானால் தான் விவாகரத்து செய்ய முடியும். அதனால் சில மாதங்கள் முடிந்தப்பின் ஐஸ்வர்யா ரோஹித்தை விவாகரத்து செய்வார் என்றும் கூறப்படுகிறது.

By Spyder

You missed