மரணத்திற்கு முந்தைய நாள் மரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்த பிரதாப் போத்தன்! அப்படி என்ன பதிவிட்டிருந்தார் தெரியுமா...? இவ்ளோதாங்க வாழ்க்கை..!!

நடிகர் மற்றும் இயக்குநரான பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பிரதாப் போத்தன் மரணத்திற்கு முன்பு தனது பேஸ்புக்கில் மரணம் குறித்து சில பதிவுகளைபதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நாம் தினம் எச்சில் விழுங்குவதால் கூட மரணம் ஏற்படுகிறது என்று அதிர்ச்சியான ஒரு பதிவு செய்துள்ளார்.

மற்றொரு பதிவில் “நீங்கள் ஒரு நோயின் காரணத்தை சரியாக கண்டுபிடித்து குணப்படுத்தாமல் அந்த நோய்க்கான அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தி வருகிறீர்கள் என்றால் நீங்கள் மரணம் வரை மருந்துகளை மட்டும் தான் நம்பியிருக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

இன்னொரு பதிவில் சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை அது காதல் என்பேன், வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களைச் செலுத்தியே கழிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

மரணத்திற்கு முந்தைய நாட்களில் பிரதாப் போத்தன் மரணம் குறித்து இப்படி பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

By marvel

You missed