தமிழகத்தில் மது அருந்தாமல், திருமணத்திற்கு வரதட்சணை வாங்காத அதிசய கிராமம் ஒன்றை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில், மது அருந்தாத நபர்களையும் காண முடியாது, திருமணத்திற்காக வரதட்சணை வாங்காத குடும்பத்தையும் காண முடியாது.

அந்த அளவிற்கு பரபரப்பான காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமல் ஆச்சரியப்படுத்தும் கிராமம் ஒன்று முன்னோடியாக திகழ்ந்துள்ளது.

ஆம், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர், அ.கோம்பை கிராமத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் மற்றும் கூலி தொழில் தான் இவர்களின் பிரதான தொழில்.

இந்த கிராமத்தின் முக்கியம் வாய்ந்ததே யாரும் இங்கு வசிப்பவர்கள் மது அருந்துவது கிடையாதாம். அப்படி மீறி ஒருவர் மது அருந்தினால் ஊர் கட்டுப்பாட்டுக்கு அவர்கள் கட்டுப்பட நேரிடுமாம்.

அதுமட்டுமின்றி, வெளியூர் சென்றாலும் மது அருந்தமாட்டார்களாம். மேலும் இந்த கிராமத்தில் திருமணத்திற்காக வரதட்சணையே வாங்க மாட்டார்களாம்.

இந்த ஊரின் கட்டுப்பாட்டுக்கு காவல் தெய்வமாக கருப்புசாமி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த கிராமத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

By Spyder

You missed