மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா...!! இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லை...!! அப்படி என்ன செய்தாள் தெரியுமா...? வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் என பல கோணங்களில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார் அர்ச்சனா. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் அர்ச்சனா. இவர்  கதறி அழுத வீடியோ காட்சி ஒன்று இணைய தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அர்ச்சனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் சமூக வலை தளங்களில் பல வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அதற்கு தகுந்தாற் போல பதிலடியும் கொடுத்து விடுவார் அர்ச்சனா. தற்போது அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ளார்.

இந்த நிலையில் அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடிய போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக் கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனாவின் மகள் ஸாரா தனது தாயாரின் பெருமை குறித்து 7 பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் அந்த கடிதத்தை படித்து தான் அவர் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுததாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

By marvel

You missed