சீரியல்களில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நிவிஷா. பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்தில் இருக்கும் சிலரில் இவர் குறிப்பிட வேண்டியவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பல லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.பார்ப்பதற்கே மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நிவிஷா வருங்காலத்தில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அம்மணிக்கு அப்படி ஒரு வரவேற்பு சமூக வலைத்தளத்தில் கிடைத்துள்ளது. சுமாராக இருப்பவர்களே செம பிரபலம் ஆகும் நிலையில் செம்மையாக இருக்கும் இவரை பற்றி சொல்லவா வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இவருடைய அழகான உடல்வாகு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என அனைத்து அம்சங்களுடனும் அட்டகாசமாக வலம் வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு இடத்திலும் பந்தா காட்டாமல் எளிமையாக இருக்கும் இவரது குணம் அனைவருக்கும் பிடித்துள்ளதாம். இதுவே அவரது வருங்கால வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் என்கிறார்கள்.

திருச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நிவிஷா மாடல் அழகியாக வலம் வந்து தொகுப்பாளினி, நடிகை என அடுத்தடுத்து தன்னுடைய கேரியரை வளர்த்துக் கொண்டே செல்கிறார். கண்டிப்பாக வருங்காலத்தில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கலாம்

By marvel