தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படமே ஹிட் கொடுத்தவர் அனிரூத் ரவிச்சந்திரன். இப்படத்திற்கு பிறகு டேவிட்,வணக்கம் சென்னை உள்ளிட்ட ஆரம்பகாலகட்ட படங்களில் இசையமைத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன் தாரா உள்ளிட்டவர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

சமீபத்தில் பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பல சாதனைகளை யூடியூப்பில் பெற்று வருகிறார். கையில் விக்ரம், தலைவர் 169, ஏகே61, இந்தியன் 2 போன்ற படங்களுக்கு இசையமைக்கவுள்ளார்.

கடந்த சில வருங்களுக்கு முன் அனிரூத் உடன் நடிகை ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த புகைப்படம் லீக்காகி சர்ச்சையை கிளப்பியது. இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கவும் செய்தனர். இதன்பின் இசையில் முழு கவனம் செலுத்து வந்த அனிரூத் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பிறந்த நாள் இரவு இணைந்து புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறினார்.

இதனை பலர் தவறாக நினைத்து ரகசிய காதல் என்று செய்திகளை பரப்பி விட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த இருவரும் நண்பர்கள் தான் என்றும் தெரிவித்தனர். தற்போது அனிரூத்துக்கு திருமணம் செய்து வைக்கவுள்ளதாக குடும்பதினர் முடிவெடுத்துள்ளார்களாம்.

இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சும் அடிப்பட்டு வருகிறதாம். இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் சமீபகாலமாக வதந்தி செய்திகள் பரவி வருகிறது ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரத் தகவல்களும் வெளியாகவில்லை.

By Spyder

You missed