பிரபல நடிகை சந்தோஷியின் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா !! இப்போ இன்னொரு விசேஷமும் இருக்கு !!

சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரைக்கே திரும்பிய பல நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் .இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ திரைபடத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமானார். மேலும்,இந்த திரைப்படம்தான் அவருடைய முதல் திரைப்படம்.

இப்படத்தை தொடர்ந்து நடிகை சந்தோஷி அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் என பல படங்களில் நடித்து உள்ளார். இவ்வளவு படம் நடித்தும் இவர் வெள்ளித்திரையில் அதிக அளவு பிரபலமாகவில்லை.

இதனைத்தொடர்ந்து நடிகை சந்தோஷிக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத் திரை நோக்கி பயணம் செய்தார். பின் இவர் நடிப்பில் சன் டிவியில் ஓளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு பல தொடர்களில் நடித்து உள்ளார்.

மேலும், நடிகை சந்தோஷி வெள்ளித்திரையில் பிரபலமானதை விட சீரியலில் தான் இவர் அதிக அளவு மக்களிடையே பேசப்பட்டார். இந்நிலையில் இவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.மேலும்,இவர் சமீப காலமாகவே சீரியலில் காண முடியவில்லை.இந்நிலையில் நடிகை சந்தோஷி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.

அது மட்டுமில்லாமல் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது அவருக்கு வளைகாப்பு நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வெளியானது. இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளது.

அதுவும் அழகான பெண் குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளார். சிசேரியன் மூலம் தான் குழந்தைகள் பிறந்து உள்ளது இந்த நிலையில் நடிகை சந்தோஷி தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.