ஒரு காலத்தில் எந்த ஒரு நடிகராலும் அசைக்க முடியாத நடிகராகவும் ரஜினி, கமல் இடையில்  சரியான போட்டியாக நடித்த நடிகர் என்றால் அது மைக் மோகன் தான். நடிகர் மைக் மோகன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.

மைக் மோகன் திரைப்படம் என்றாலே அனைத்து மக்களுக்கும் ஒரு கொண்டாட்டம் போல தான் இருக்கும். வித்தியாசமான கதைக்களம் தனது எதார்த்தமான நடிப்பு என்று மக்கள் மனதைக்  கவர்ந்தவர். முக்கியமாக தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன்.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகர் மைக் மோகன் வாழ்க்கையில் பிரபலமான நடிகை ஒருவர் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கும் என்று ஒரு வதந்தியை பரப்பியதால் மைக் மோகன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. இதற்கு முக்கிய காரணமே மைக் மோகனை ஒரு நடிகை காதலித்து வந்தார்.

பின்னர் தன் காதலை மைக் மோகனிடம் கூறியதும் மறுத்த ஒரே காரணத்தினால் இபப்டி ஒரு செயலை செய்துள்ளார். இந்த நடிகை சொன்ன வார்த்தையை நம்பி பத்திரிக்கையிலும் மைக் மோகனுக்கு எய்ட்ஸ் இருக்கு என்று அனைவரும் நம்பினார்கள். பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

இப்படி ஒரு நிலைமையில் தன் குடும்பத்தை விட்டு மைக் மோகன் யாரும் இல்லாத தனிமையில் தான் வசித்து வந்தாராம். ஆனால் இப்போது வரை நன்றாகத்தான் ஆரோக்கியமாக உள்ளார் மைக் மோகன். இவரைக் குறித்து அப்போது பத்திரிக்கையில் வந்த எல்லா தகவலுமே வதந்தி பொய் என்று நிரூபித்து விட்டார்.

By marvel

You missed