தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். மாடலிங் துறையில் இருந்து வந்து நடிகையாகிய யாஷிக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் கலந்தும் படங்களில் கமிட்டாகியும் வந்தார். அவர் நடிப்பில் சோம்பி படத்தில் நடித்தும் இருந்தார்.
கடந்த ஆண்டு எஸ் ஜே சூர்யாவின் கடமையை செய் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையில் இருந்து 4 மாதங்கள் கழித்து பழைய நிலைக்கு மாறினார்.
கையில் பல படங்களை வைத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் யாஷிகா. இடையில் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்தாரே அவரை திருமணம் முடித்துவிட்டாரா என கேள்வி எழுப்பினர்.ஆனால் 22 வயதான யாஷிகா படத்தின் ஷூட்டுக்காக கழுத்தில் தாலி அணிந்திருக்கிறார் என்று பலர் கூறி வருகிறார்கள்.