பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று திடீரென காலமானார்..!! கண்ணீரில் குடும்பத்தினர்...!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்திலும் சில படங்கள் இயக்கியிருக்கிறார் என்பதோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

“மீண்டும் ஒரு காதல் கதை” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்தார். பின் தொடர்ந்து தமிழில் “ஜீவா”, “வெற்றிவிழா”, “மை டியர் மார்த்தாண்டன்”, “மகுடம்”, “ஆத்மா”, “சீவலப்பேரி பாண்டி”, “லக்கி மேன்” போன்ற படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளிவந்தன. இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைகளங்களைக் கொண்டவைகளாக இருந்ததென்றே சொல்ல வேண்டும்.

வில்லன் வேடத்திலும், குணசித்திர வேடத்திலுமே நடித்து வந்த நடிகர் நெப்போலியனை “சீவலப்பேரி பாண்டி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்த்தியவர் இவர். 1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது ‘மீண்டும் ஒரு காதல் கதை” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார் பிரதாப்.

பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ம் ஆண்டு திருமணம் செய்தார், ஆனால் இருவரும் 1986ம் ஆண்டே பிரிந்தார்கள். ஆனால், 2012ல் இவர்களது திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 1990ம் ஆண்டு அமலா சத்யனாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கேயா எனும் மகள் உள்ளனர். மறுமணம் செய்த பிரதாப் 2012ம் ஆண்டு அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இவருக்கு சினிமாவை போன்று குடும்ப வாழ்கை வெற்றியாக இல்லாமல் போனதால், சமீப காலமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், இன்று காலை இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By marvel

You missed