கலர்ஸ் தமிழ் சேனல் ஆரம்பித்து சில வருடங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்து வந்துள்ளது. ஆம், தமிழ் சேனல்களில் முன்னனி சேனல்களான சன்டிவி, விஜய்டிவி ஜீ தமிழ் இவர்களுக்கு அடுத்ததாக, கலர்ஸ் தமிழும் தங்கள் முத்திரையை பதித்துள்ளது. அதற்கு சில முக்கிய காரணங்களும் இருந்தனர்.

 

இவர்கள் சேனலை விளம்பரப்படுத்துவதற்காக, கொண்டு வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபல நடிகர் ஆர்யா-வை வைத்து நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிகள் எல்லாம், மக்கள் மத்தியில் இந்த சேனலை வெகுவாக அறிமுகப்படுத்தியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சீரியல் ரசிகர்களை பார்க்க வைத்ததற்கு முக்கிய காரணம்.

அதில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் தான். அந்த சீரியலில் சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடியாக அறிமுகமானார்கள். அது போக அந்த சீரியல் நடிக்கும் போதே இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின் திடீரென அந்த சீரியலை முடித்தபின். அந்த இடத்தை லாவாகப் பிடித்தது, இதயத்தை திருடாதே சீரியல் தான்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் ஹீரோ-வாக நவினும், ஹீரோயினாக, ஹேமா பிந்து-வும் நடித்து வந்தனர். சீரியலில் இவர்களின் ஜோடியை பார்த்த பலரும் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கூறினர்.

ஆனால், அதை இருவரும் மறுத்து விட்டு, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறினர். அப்போதும் கூட ரசிகர்கள், இவர்கள் உண்மையான ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த சீரியலின் நடிகர் நவீன், பிரபல செய்தி தொகுப்பாளரை காதலிப்பதாக தெரிவித்தார்,

அதைத்தொடர்ந்து அவர் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவரின் சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில் அதில் ஹீரோயினாக நடித்த ஹேமா பிந்து அந்த சீரியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளிவந்தது.

அதைப்பற்றி ரசிகர்கள் கேட்டதற்கு, “ஆமாம். நானும் சஹானா-வை மிஸ் செய்வேன் என்றும். மிக விரைவில் அடுத்த பிராஜக்டில் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதனால் அவர்கள் ரசிகர்கள் பலரும் “நாங்களும் மிஸ் செய்வோம்” என பல போஸ்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், சீரியலின் நடிகையே சென்ற பிறகு சீரியல் தொடருமா? இல்லை இவருக்கு பதில் வேறு யாராவது நடிக்கப் போகிறார்களா? என்ற அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இனி இவருக்கு பதிலாக, தர்ஷனா அசோகன் என்ற சீரியல் நடிகை நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

By marvel

You missed