உலக அளவிலான சினிமாக்களுக்கு மத்தியில் இப்போது சின்னத்திரையில் சீரியல்களுக்கான டி.ஆர்.பி வார் நடந்துக் கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். என்னதான். கே.ஜி.எப், பீஸ்ட் என சினிமா ரசிகர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும், சீரியல் ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணமா என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு மேலும் முன்னாடி எல்லாம் சீரியல் என்றாலே அழுகை என்ற நிலையை மாற்றி, வண்ணத்திரைக்கு நிகராக அனைத்து காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் என தற்போது சென்று கொண்டிருக்கிறடு. அது போக பிரபல சினி நடிகர்கள் கூட, சீரியலில் வந்து தலை காட்டி விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களுக்கிடைய கடும் போட்டி சென்று கொண்டிருந்தது. அதனால் பல புதிய சீரியல்களை கொண்டு வருவதும், நிறுத்துவதுமாக இருக்கின்றனர். அப்படி ஜி தமிழில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் கோகுலத்தில் சீதை. இதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தின் நந்தா-வும், வசு கதாப்பாத்திதில் ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர்.

இதில் அர்ஜூன். வசு என்ற ஜோடிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த சீரியல் ஆரம்பத்தில் மிகப்பெரிய பிஸ்னஸ் மேனுக்கும், சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும், இடையே நடக்கும் மோதல், காதல் சீண்டல்களை சொல்லிக் கொண்டிருந்தது. அதன் பின் சட்டென்று. அந்த கதை இப்போது கிராமத்து பாணியில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீரியல் ஒளிப்பரப்பு நேரத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தனர். அதுவே அந்த சீரியல் ரசிகர்களுக்கு, வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது. இந்நிலையில் வரும் வெள்ளி கிழமை உடன் இந்த சீரியல் முடியப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைக்கேட்டு ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

அதே போல், ஏற்கனவே இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து கதாநாயகி விலகுவதாக தகவல்கள் வந்திருந்தது. ஆனால் தற்போது அந்த சீரியலின் ஹீரோ நவீன், கடைசி நாள் சூட்டிங் என அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோ-வை பதிவிட்டுள்ளார். அதனால் அந்த சீரியலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதைப்பற்றி உங்கள் கருத்துகள் மற்றும், உங்களுக்கு வேற சீரியல் பற்றி ஏதாவது சொல்ல விருப்ப பட்டாலும் தாராளமாக நீங்கள் இங்கே கூறலாம். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

By marvel

You missed