பிரபல இயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... பொன்னியின் செல்வன் பட பணிகள் தாமதம்...!!

பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்த இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த அவர், தற்போது ஒரு வழியாக அப்படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். அதன் படி முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில்தாமதம் ஏற்பட்டுள்ளது.

By marvel