அமீரின் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் பிரியாமணி நடிப்பில் வெளியான, ‘பருத்திவீரன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே போல், இந்த படத்தின் நாயகியான பிரியாமணிக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பது மட்டும் இன்றி நடிகராகவும் தனி முத்திரை பதித்துள்ளார். வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல்  சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாறன்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமீர்.

இந்நிலையில் தற்போது இவரது தாயார் பாத்துமுத்து பீவி, வயது மூப்பின் காரணமாகவும் உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். இதை தொடர்ந்து, அவரது உடல் சென்னை கே கே நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமீரின் தாயார் உயிரிழப்பு அமீர் மற்றும் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

By marvel

You missed