தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, ஹீரோயினாக நடித்த நடிகை அமலாபால் மீது காதல் வயப்பட்டார் விஜய். இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு நடிகை அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்தார் ஏ.எல்.விஜய்.

கடந்த 2019-ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ஏ.எல்.விஜய். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை இன்று காலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

இதனால் ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாயிலாக இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

By marvel

You missed